வால்நட்சத்திரம் - வீடியோ (Comets - The Bird of Passage.mp4)

வால்நட்சத்திரம் - வீடியோ

வல்நட்சத்திரங்களுக்கு மனிதன் அனுப்பிய விண்கலங்கள் எவ்வாறு சென்றன? அவை அங்கு என்ன கண்டுபிடித்தன? நம் எதிர்கால திட்டங்கள் யாவை? என்பன குறித்து விளக்கும் வீடியோ படம்.

நன்றி: தூர்தர்ஷன்  ( DD) , விக்ஞான் பிரச்சார் ( Vigyan Prasar)

For preview and download click the picture. (strictly not for commercial purpose by any means)


Direct Download:
Comets - The Bird of Passage.mp4 (200MB)

Comets - The Bird of Passage.dat 255MB

Comets - The Bird of Passage.flv 144MB







சூரியமண்டலம், வால்நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தோற்றம் மற்றும் ஐசான் - ppt

 The Origin of Solar system and Comets
 and Comet ISON

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஐசான் வால்நட்சத்திர பிரச்சாரத்திற்காக

Download:

சூரியமண்டலம், வால்நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தோற்றம் மற்றும் ஐசான் - ppt  (8.2MB)

ஐசான் ISON Posters 1-19 for Download

ஐசான் விளக்கப்படங்கள் 1- 19 வரை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள தொடர்புகளை சொடுக்கவும்.

(For preview or individual downloads, go to the previous posts)

Download the Zip files:

1. Posters 1-5  (9.3MB)


2. Posters 6-11 (9.7MB)

3. Posters 12-14 (9MB)

4.Posters 15-17 (10.6MB)

5. Posters 18-19 (6MB)


சூரிய மண்டலம் - போஸ்டர் 1

விளக்கப்படம் 1 - சூரிய மண்டலம் 

500 கோடி வருடங்களுக்கு முன் நமது சூரியகுடும்பம் வாயூ மேகங்களிலிருந்து உருவானது. இந்த வாயூ மேகங்களின் மையப்பகுதியில் ஏற்பட்ட பிரமாண்ட அழுத்தத்தால் சூடாகி அணுப்பிணைவூ வினை ஏற்பட்டு நமது சூரியன் உருவானது. மீதியூள்ள சில மேகப்பகுதிகள் 8 கோள்களாகவூம்இ அதனுடைய சந்திரன்களாகவூம் குள்ளக் கோள்களாகவூம் அஸ்டராய்டுகளாகவூம் (லட்சக்கணக்கான பாறைத் துண்டுகளாகவூம்) வால்நட்சத்திரங்களாகவூம் மற்றும் தூசிப்பொருட்களாகவூம் மாறின. இவைகள் சூரியனின் ஈர்ப்புவிசையால் கெப்ளரின் விதிப்படி சூரியனை சுற்றிவருகின்றன......

மேலும் தெரிந்துகொள்ள தரவிறக்கம் செய்யவும். 

   

நம் சூரியகுடும்பம் எப்படி தோன்றியது? - Poster 2

விளக்கப்படம்- 2 நம் சூரியகுடும்பம் எப்படி தோன்றியது?

நமது சூரிய குடும்பத்தின் வயது 460 கோடி வருடங்கள் ஆகிறது. இது அணுமேகங்களால் உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த அணு மேகங்கள் மத்தியில் ஈர்ப்பு விசை அதிகரித்து மையப் பகுதியை நோக்கி அமிழ்ந்து சிறியதாகவும், வெப்பமுடையதாகவும் மாறி சுற்ற ஆரம்பித்தன. இந்த நிகழ்வுப் போக்கில் மேலும் அதிக அணு மேகங்கள் சூரியனின் மையத்தில் சேர ஆரம்பித்தன. சூரியனின விளிம்புப் பகுதியில் உள்ள  பொருட்கள் கிரகங்களாகவும், உபகிரகங்களாகவும், பாறைப்பொருட்களாகவும், வால் நட்சத்திரங்களாகவும் மாறியிருக்கின்றன.
சூரிய அணுமேகத் தொகுதியின் நடுவில் மேலும் அதிகமான பொருட்;கள் வந்து சேர்ந்து மையத்தின் அழுத்தத்தை அதிகரிக்க நடுவில் அளப்பபரிய வெப்பம் அணுப்பிணைவுகளால் உருவாகி சூரியன் தோன்றியுது. இந்த நிகழ்வின் போது சூரிய மையத்தில் மேலும் பொருட்கள் விழுந்து கொண்டிருந்த காரணத்தால் பொருட்கள் மையத்திலிருந்து விலகி சுற்ற ஆரம்பித்தன. அவைகள் ஒன்றோடொன்று மோதவும் செய்தன. சில பொருட்களின் மின் சக்தி (நுடநஉவசழளவயவiஉ) காரணமாக ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு தூசிப் பொருட்களாக வளர ஆரம்பித்தன. ......................................

மேலும் அறிந்து கொள்ள.....

download: ISON ஐசான் Tamil-Poster02_FormationOfSolarSystem.jpg (1.7MB)


வால்நட்சத்திரம் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது? - Poster 3

விளக்கப்படம் 3 - வால்நட்சத்திரம் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது?

வால்நட்சத்திரங்கள் என்பது சுமார் 100 மீட்டரிலிருந்து, ஒரு சில கி.மீ தொலைவுக்கு இருக்கும் பனித்தூசுக்களாலான பாறைகள் ஆகும். இவை சூரியனை மிக நீண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. இந்த பனிக்கட்டி என்பது உறைந்த நிலையிலுள்ள நீர், அம்மோனியா, கரியமில வாயு, போன்ற பெருட்களால் ஆனது.
ஊழஅநவ என்ற சொல்லுக்கு, நீண்ட முடியுடைய என்ற பொருளாகும். வால்நட்சத்திரத்தின் மையப்பகுதி, ஒரு சில கி.மீ தான் என்றாலும் அது சூரியனுக்கு அருகில் வரும்போது, அதன் வால் பல கோடிக்கணக்கான கி.மீ நீளமுடையதாய் இருக்கும்.
ஒரு வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகுதொலைவில் இருக்கும்போது, மங்கலாக இருக்குமாதாலால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். வால்நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது, அதற்கு நீண்ட வால் வளர்கிறது. இவையே வால்நட்சத்திரங்களை நாம் அடையாளம் காணுவதற்கும் கண்ணைக்கவரும் வண்ணம் இருப்பதற்கும் காரணம் ஆகும். வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் நெருங்கும்போது அதிலுள்ள பனிக்கட்டி நிலையிலுள்ள வாயுக்கள் சூரிய ஒளியால் ஆவியாகி, தூசுடன் சேர்ந்து அதன் பின்னால் நீண்ட வாலாக விசிறியடிக்கப்படுகின்றன. இந்த வாயுக்கள் இப்படி வெளியே வீசி எறியப்படும் முன்னால் அவை உட்கருவைச் சுற்றி கோமா என்கிற தற்காலிக வளிமண்டலத்தை உண்டாக்குகின்றன...........

மேலும் அறிந்துகொள்ள...

Download : ISON ஐசான் Tamil-Poster03_WhatIsComet.jpg (1.4MB)



வால்நட்சத்திரத்தின் உள் கட்டமைப்பு (anatomy) - Poster -4

விளக்கப்படம் 4 - வால்நட்சத்திரத்தின் உள் கட்டமைப்பு (anatomy)

வால்நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் பொழுது பனிப்பாறையாக சேர்ந்து இருக்கின்றன, அப்போது அவற்றை ஆராய்வது கடினம். இருப்பினும், சூரியனிலிருந்து 50 கோடி கி.மீ தொலைவுக்குள் வந்துவிட்டால் அவைகளின் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் உண்டாகின்றன. அப்போது நாம் அதன் உட்கரு, கோமா மற்றும் இரண்டு விதமான வால்கள் ஆகியவற்றைத் தெளிவாகக் காணலாம்.
சூரிய காற்றால் சூரியனிலிருந்து வெளிப்படும் துகள்கள் கோமாவில் இருந்து வாயுக்களும் தூசுகளும் வெளிதள்ளளப்பட்டு அயனிவால் (சூரியனின் எதிர் திசையில் நீண்டு இருக்கும்) மற்றும் தூசுவால் (வால்நட்சத்திரப்பாதையில் சூரியனுக்கு எதிராக வளைந்து காணப்படும்) ஆகியவற்றைத் தோற்றுவிக்கின்றன.
உட்கருவாக இருக்கும் பனிப்பாறையின் மேல்பகுதி சூரியஒளியால் ஆவியாகி உட்கருவைச்சுற்றி ஒரு வளிமண்டலத்தை உருவாக்கிவிடும். இதுவே கோமா (தலை) எனப்படும். சில ஆயிரம் கி.மீ அளவுள்ள தலைப்பகுதியானது வால்நட்சத்திரம் சூரியனை நெருங்க நெருங்க பெரிதாகின்றது. .............
மேலும் அறிந்துகொள்ள...

Download : ISON ஐசான் Tamil-Poster04_CometAnatomy.jpg (1.8 MB)